30 வருடங்களுக்குப் பின்னர் சிங்கப்பூரில் வன்செயல்!!

333

songaporeசிங்கப்பூர் காவல்துறையினர் தெற்காசி நாடுகளைச் சேர்ந்த 27 பேரை கைது செய்துள்ளனர். லிட்டில் இந்தியா என அழைக்கப்படும் பிரதேசத்தில் இந்திய பிரஜை ஒருவர் மரணமானதை அடுத்து பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தனியார் பயணிகள் பேரூந்து ஒன்று இந்திய பிரஜையை மோதியதை அடுத்து அவர் மரணமானார். இந்த நிகழ்வினை அடுத்து 400 வெளிநாட்டு பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் வன்செயலில் ஈடுபட்டு காவல்துறையினரை நோக்கி தமது தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலின் போது காவல்துறையினர் உட்பட 18 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் 30 வருட இடைவெளிக்குப் பின்னர் இடம்பெறும் முதலாவது வன்செயல் சம்பவம் என சிங்கப்பூர் காவல்துறை ஆணையாளர் என்.ஜி.ஜோ தெரிவித்துள்ளார்.

அதேவேளை வன்செயல் சம்பவம் இடம்பெற்றதற்கான காரணம் என்னவாக இருந்தாலும் சிங்கப்பூரில் வன்செயல் இடம்பெறுவதற்கு அரசாங்கம் இடம் தரப் போவதில்லை என சிங்கப்பூரின் பிரதமர் லீ சிங் லூ எச்சரித்துள்ளார்.