இலங்கையின் முதலாவது செய்மதி இராவணா -1 : ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது!!

754

இராவணா -1

இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் உருவாக்கப்பட்டுள்ள இராவணா-1 என்ற செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக ஆர்தர் சீ.க்ளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்மதி கடந்த தினம், ஜப்பான் விண்வெளி ஆய்வு முகவர் நிலையத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

1.5 கிலோ கிராம் நிறையுடைய குறித்த செய்மதி, இது இலங்கையின் சார்பில் அனுப்பப்படும் முதலாவது செய்மதியாகும்.