செல்லப்பிராணிக்கு 1400 கோடி
ஜேர்மனியை சேர்ந்த கோடீஸ்வர ஆடை வடிவமைப்பாளர் உயிரிழந்த நிலையில் தனது செல்லப்பிராணிக்கு 1400 கோடியை கோடியை எழுதி வைத்துள்ளார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெட், தன் செல்லப்பிராணி ‘செளபீட்’ மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அரசு அனுமதித்தால் செளபீட்டை திருமணம் செய்து கொள்ளக்கூட தயார் என நகைச்சுவையாக கூறியிருந்தார்.
இந்நிலையில் கார்ல் கடந்த 19ம் திகதி உயிரிழந்தார். இதையடுத்து தனது செளபீட் மீது வைத்திருந்த பாசத்துக்கு அடையாளமாக தான் இறப்பதற்கு முன்னர் தன் சொத்தில் ஒரு பங்கான ரூ. 1400 கோடியை செளபீட்டின் பேரில் எழுதி வைத்துள்ளார்.
தான் உயிருடன் இருக்கும் வரை தன் செல்லப்பிராணி செளபீட் பூனையை மிகவும் கண்ணும் கருத்துமாக பேணி பாதுகாத்து வந்த கார்ல் லாகர்ஃபெட், தான் மறைந்த பின்னர் அதே போல் செளபீட் வாழ இப்படி அதன் மீது 1400 கோடி மதிப்புள்ள சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.