வவுனியாவில் பூரண ஹர்த்தால் : இயல்புநிலை முடங்கியது!!

1162

வவுனியாவில் பூரண ஹர்த்தால்

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று (25.02.2019) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும் வடக்கு மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் வவுனியாவிலும் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளது. தனியார் மற்றும் இ.போ.சபை பேருந்துக்களும் சேவையில் ஈடுபடவில்லை. இருப்பினும் தூர இடங்களுக்கான போக்குவரத்தினை இ.போ.சபை பேரூந்துக்கள் மேற்கொள்கின்றன.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளமையால் வவுனியா நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது. இயல்பு நிலை முற்றாக முடக்கமடைந்துள்ளதுடன் வீதிகளில் பொலிசார் நடமாட்டமும் ஆங்காங்கே காணப்படுகின்றது.