இனப்படுகொலைகளை தடுக்குமாறு ஐநா கோரிக்கை!!

365

UNஉலகில் இனப்படுகொலைகள் அதிகரித்து வருவதை தடுக்க நாம் துணிச்சலுடனும், விழிப்புடனும், உறுதியுடனும் செயல்படவேண்டும் என்று ஐ.நா துணைப் பொதுச்செயலாளர் யான் எலியாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களுக்கும் மற்றும் பிற சிறுபான்மை குழுக்களுக்கும் எதிராக நாத்சி கொள்கையாளர்கள் மனித சமுதாயத்துக்கு இழைத்த குற்றங்களின் எதிரொலியாக

1948ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி நடந்த ஐ.நா. பொது சபையின் முதல் கூட்டத்தில் உலக ஒப்பந்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இனப்படுகொலை, அனைத்துலகச் சட்டத்தின்கீழ் குற்றம் எனக் கூறப்பட்டது.

இந்த உலக ஒப்பந்தத்தை இன்று உலகில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் அமல்படுத்துகின்றன.

இனப்படுகொலையைச் செய்வோர், அதற்குத் தூண்டுகோலாய் இருப்போர், அதற்குத் திட்டம் தீட்டுவோர் ஆகிய அனைவரும் இச்சட்டத்தின்கீழ் குற்றவாளிகள் ஆகின்றனர். என்று தெரிவித்தார்.