கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : இந்திய வான்பரப்பில் நடந்தது என்ன?

587

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாய் நோக்கி பயணித்த UL 225 என்ற விமானம் நேற்று மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம் நேற்று மாலை 06.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்திய வான் எல்லையில் வைத்து விமானத்தில் பறவைகள் மோதியுள்ளதால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 225 என்ற மற்றுமொரு விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு டுபாய் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.