ரஜினியின் கோச்சடையான் ரிலீஸ் திகதி ஒத்திவைப்பு!!

369

kochadayanரஜினி நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் கோச்சடையான். இப்படம் மோஷன் கேப்சர்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினி தந்தை, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார்.

தந்தை கதாபாத்திர ரஜினிக்கு ஷோபனா ஜோடியாகவும், மகன் கதாபாத்திரத்திற்கு தீபிகா படுகோனே ஜோடியாகவும் நடித்துள்ளனர். மேலும், சரத்குமார் நாசர், ஆதி உள்ளிட்ட பல நடிக, நடிகையரும் நடித்துள்ளார். இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்ததையடுத்து இப்படத்தை வரும் ஜனவரி 10ம் திகதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்படத்தின் வெளியீட்டு திகதியை தற்போது ஒத்திவைத்துள்ளனர்.

இப்படத்தின் ஆங்கில தலைப்பில் நியூமரலாஜிப்படி கூடுதலாக ‘ஐ’ என்ற எழுத்தை சேர்த்திருக்கிறார்களாம். மேலும் ரஜினியுடன் மோதும் வில்லன் கதாபாத்திரம் ஒன்றும் கூடுதலாக சேர்க்கப்படுகிறதாம். இதனால்தான் படம் வெளியீட்டு திகதியை ஒத்திவைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.