அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்!!

304

Anuskaஅனுஷ்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்ப்பதாக ஆந்திர திரையுலகில் செய்தி பரவி உள்ளது.

அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. 2005ல் சினிமாவில் அறிமுகமானார். அருந்ததி படம் அவரை முன்னணி நடிகையாக்கியது. தமிழில் வேட்டைக்காரன், சிங்கம், தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது ருத்ரமாதேவி என்ற சரித்திர படத்தில் அரசி வேடத்தில் நடிக்கிறார். பாகுபலி என்ற புராண படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

சமீபத்தில் நடித்த இரண்டாம் உலகம் படம் தமிழ், தெலுங்கில் ரிலீசானது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் அனுஷ்கா கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் குறைந்துள்ளதாம்.

இதனால் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கைவசம் இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது. அவற்றை முடித்து விட்டு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.