தமிழக மீனவர்கள் 200ற்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் கைது!!

659

fishermanஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

செம்மலை பிரதேச கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துவரப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து இந்திய ஊடகமான தினகரன் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது..

தமிழக மீனவர்கள் 250 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து மீண்டும் அட்டூழியத்தில் ஈடுப்பட்டுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்தப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் 35 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்கள் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் ஆவர். கைதான மீனவர்களை இலங்கை கடற்படையினர் திருகோணமலை கொண்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.