வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் மகா சிவராத்திரி-2019(படங்கள்,வீடியோ)

1528

வவுனியாவில்  உள்ள சிவ ஆலயங்களில் முதன்மையானதும் சிறப்புமிக்கதுமான கோவில்குளம்  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி பெருமளவிலான பக்த அடியார்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக 04.03.2019  திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் பிரதமகுரு  சிவஸ்ரீ  சதா சங்கரதாச குருக்கள் தலைமையில் விசேட அபிடேகம் மற்றும் ஆறுகால பூஜைகளும் இடம்பெற்றது.. பெருமளவிலான பக்தர்கள் மூல மூர்த்தியாகிய சிவலிங்கத்திற்கு தண்ணீர் வார்த்தும், பால் வார்த்தும் தமது நிவர்த்திக் கடன்களை நிறைவு செய்ததுடன், அகிலம் கலையரங்கில் இரவு முழுவதும்  கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.

காலையில் 6.00 மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் சமேதராய் எழுந்தருளி  அமிர்தவர்சினி தீர்த்தகரையில் தீர்தோற்சவம் இடம்பெற்றது.