நீதிமன்றம் விதித்த உத்தரவு
திருகோணமலை, குச்சவெளி பகுதியில் 14 வயதுடைய சிறுமியை ஒரு வருடமாக காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்ற காதலனை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேக நபரை இன்று ஆஜர்படுத்திய போதே இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலை, கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 14 வயதுடைய சிறுமியை ஒரு வருடமாக காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் சிறுமியை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையிலே சிறுமியின் பெற்றோர் சந்தேக நபர் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர். இதற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.







