ஆர்யா–டாப்சி காதல் : ஜோடியாக நடித்து நெருக்கம்!!

463

Aryaஆர்யா–டாப்சி இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. ஆர்யாவுக்கு நிறைய நடிகைகள் சினேகிதிகளாக உள்ளனர். ஏற்கனவே பலருடன் அவர் இணைத்து பேசப்பட்டார். நயன்தாராவை காதலிப்பதாக கூறப்பட்டது. இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜாராணி படங்களில் சேர்ந்து நடித்தனர். நயன்தாராவை தன் வீட்டுக்கு அழைத்து ஆர்யா பிரியாணி விருந்து கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

பிறகு இருவருமே தங்களுக்குள் காதல் இல்லை என மறுத்தனர். அதன் பிறகு அனுஷ்காவுடன் சேர்த்து சேப்பட்டார். இரண்டாம் உலகம் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது. இதையும் ஆர்யா மறுத்தார்.

தற்போது இந்த பட்டியலில் டாப்சி சேர்ந்துள்ளார். இருவரையும் இணைத்து பலமான கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் உலவுகின்றன. ஆரம்பம் படத்தில் ஆர்யாவும் டாப்சியும் சேர்ந்து நடித்தனர். படம் பார்த்தவர்கள் இருவரையும் பொருத்தமான ஜோடி என வர்ணித்தார்கள். இவர்கள் நெருங்கி பழகுவதாக கூறப்படுகிறது.

புது படங்களுக்கு டாப்சியை ஆர்யா சிபாரிசு செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் தனக்கு ஜோடியாக டாப்சியை தேர்வு செய்யும்படி நிர்பந்திப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.