தொழில் அதிபர் பைசூல் மீது பாலியல் மோசடி : கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா மீண்டும் புகார்!!

547

RADHAசுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழில் அதிபர் பைசூல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், லட்சம் மோசடி செய்து விட்டதாகவும், குற்றம் சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக வடபழனி பொலிசார் விசாரணை நடத்தினர். ராதாவை நேரில் அழைத்து சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்திய பொலிசார் அவரது வாக்கு மூலத்தையும் பதிவு செய்தனர். அப்போது பைசூலுக்கு எதிராக மோசடி ஆவணங்களையும் ராதா போலிசிடம் கொடுத்தார்.

இதையடுத்து பைசூல் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பைசூல் முன்ஜாமீன் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து பைசூல் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போலிசார் பிடியில் சிக்காமல் பைசூல் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தென் சென்னை இணை கமிஷனர் திருஞானத்தை அவரது அலுவலகத்தில் நடிகை ராதா சந்தித்து பேசினார். அப்போது போலீசாருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகைள அவர் கூறி இருக்கிறார். இது தொடர்பாக நடிகை ராதா கூறியதாவது..

பைசூலின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும் அவரை கைது செய்வதற்கு பொலிசார் தயக்கம் காட்டி வருகிறார்கள். வடபழனி மகளிர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரேசா, பைசூலுக்கு சாதகமாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் எனக்கு நியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை.

எனவே இது தொடர்பாக தென் சென்னை இணை கமிஷனரை சந்தித்து முறையிட்டுள்ளேன். எனது வழக்கை வேறு ஒரு அதிகாரி விசாரிக்க வேண்டும். அப்போது தான் பைசூல் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் நடிகை ராதா நேற்று பகல் 12.50 மணிக்கு பொலிஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். தொழில் அதிபர் பைசூல் மீது பாலியல் –மோசடி தொடர்பாக மீண்டும் புகார் ஒன்றை கொடுத்தார். கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க காரில் வருபவர்கள் கமிஷனர் அலுவலக வாசலில் இறங்கி சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் நடிகை ராதாவின் கார் பின்புற வாசல் வழியாக பார்க்கிங் வரை சென்றது. அவரை நிருபர்கள் மறித்து கேள்விகள் கேட்டனர். அப்போது கமிஷனரை சந்தித்து விட்டு வந்து உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறிவிட்டு கமிஷனர் அலுவலகத்திற்குள் சென்று விட்டார். அவருடன் 2 வக்கீல்களும் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தனர்.