வவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம்!!

1221

படுகாயமடைந்திருந்த இளைஞன் மரணம்

வவுனியாவில் கடந்தமாதம் 16 ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து வவுனியா கண்டி வீதியில், பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றிருந்தது.

இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

விபத்தில் வவுனியாவை சேர்ந்த மு.வசந்தகுமார் என்ற 22 வயது இளைஞனே மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.