காதலனிடம் காதலை நிரூபிக்க மாடியிலிருந்து குதித்த இளம் பெண்!!

585

jumpடெல்லியில் காதலன் சொன்னதால் மேம்பாலத்திலிருந்து குதித்து இரண்டு கால்களையும் முறித்துக்கொண்ட இளம்பெண்ணிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டெல்லியை சேர்ந்த அனிதா என்னும் 25 வயது பெண்ணும் வாசிம் என்பவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் குறித்து வாசிமின் பெற்றோரை அனிதா சந்தித்தபோது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சில நாட்கள் கழித்து மீண்டும் அவர்களின் சம்மதத்தை பெறலாமென்ற எண்ணத்தோடு ஆக்ராவிற்கு ஒரு வேலைக்காக அனிதா சென்றிருந்தார்.

இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் வாசிமிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை அறிந்த அனிதா இது குறித்து தெரிந்துக்கொள்ள டெல்லிக்கு திரும்பினார்.

வாசிமின் திருமண நிச்சயதார்த்த படத்தை கையடக்க தொலைபேசியில் பார்த்த அனிதா அதிர்ந்துபோய் வாசிமை சந்திக்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது வாசிம் தன் மீது காதல் இருப்பது உண்மையானால் பாலத்தில் இருந்து குதிக்க முடியுமா என்று கேட்டார். தனது காதல் உண்மையானது என்பதை நிரூபிக்க அனிதா கிழக்கு டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் இருந்த பாலத்தில் இருந்து குதித்தார்.

இதில் அவரது இரண்டு கால்களின் எலும்புகளும் முறிந்தது. அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
காதலை நிரூபிக்க பாலத்தில் இருந்து இளம்பெண் குதித்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.