குழந்தைக்கு பலவந்தமாக மதுபானம் கொடுத்த நபர் : தாய் முறைப்பாடு!!

906

தாய் முறைப்பாடு

தனது 6 வயது ஆண் குழந்தைக்கு அயல்வீட்டில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் பலாத்காரமான முறையில் மது அருந்தச் செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை – மொதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வீட்டிற்கு விளையாட சென்ற குழந்தை மீண்டும் வீடு திரும்பிய போது அவரின் வாயில் இருந்து மது நாற்றம் வீசிய நிலையில் , அது தொடர்பில் குழந்தையிடம் தாய் வினவியுள்ளார்.

இதன்போது , திருமண வைபவம் இடம்பெற்ற வீட்டில் இருந்த நபரொருவர் தனக்கு ஒருவித பானத்தை அருந்தச் செய்ததாக குழந்தை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் எமது செய்திப் பிரிவு அம்பலாந்தோட்டை காவற்துறையின் உயரதிகாரியொருவரை தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், குழந்தையை அம்பலாந்தோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி மருத்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.