ஆறு வயது சிறுவனுக்கு மதுபானம் பருக்கப்பட்ட சம்பவம் : பொலிசார் தீவிர விசாரணை!!

363

சிறுவனுக்கு மதுபானம் பருக்கப்பட்ட சம்பவம்

ஆறு வயதான தனது மகளுக்கு அயல் வீட்டில் நடந்த வைபவம் ஒன்றின் போது பலவந்தமாக மதுபானம் பருக்கப்பட்டுள்ளதாக அம்பலான்தொட்ட -மோதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.



தனது பிள்ளை அயல் வீட்டில் விளையாட சென்று மீண்டும் வீட்டுக்கு வந்த போது பிள்ளையின் வாயில் மதுபான வாசனை வந்ததால், அது பற்றி விசாரித்த போது, அந்த வீட்டில் இருந்த ஒருவர் தனக்கு ஏதோ ஒரு பானத்தை பருக்கியதாக பிள்ளை கூறியதாக தாய் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பிள்ளையை அம்பலான்தொட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி மருத்துவ பரிசோதனை அறிக்கை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.