இலங்கை பிரதமரை கைது செய்யுமாறு ஹெல உறுமய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!!

466

T.M.Jayaratneஇலங்கை பிரதமர் டீ.எம்.ஜயரட்னவை ஊழல் விவகாரத்திற்கு உடந்தையானமை தொடர்பில் கைது செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய, பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. .

அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த தினமொன்றில் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பாரிய தொகையான ஹெரோயின் போதைப் பொருளுக்கும் பிரதமர் தரப்புக்கும் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த விடயம் பற்றி தகவல் அறிந்திருந்தால் பிரதமர் பொலிஸாரிடம் முறையிட்டிருக்க வேண்டும் என்றும் சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.



எனவே போதைப் பொருள் கடத்தலுடன் அவருக்கும் தொடர்பு இருக்கின்றமை புலனாகியுள்ளது. பிரதமரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பொலிஸ் மா அதிபரிடம் கோரி நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.