நடுநடுங்கிப் போன வீரர்கள்!!

811

Sammyநியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு திரில்லான அனுபவம் நேர்ந்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் சமன் ஆனதையடுத்து, இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போதே திரில்லான அனுபவம் நேர்ந்துள்ளது.

அதாவது டுனிடின் நகரிலிருந்து வெல்லிங்டன் நகருக்கு விமானத்தில் பயணித்த போது, பலத்த காற்று காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் தவித்ததால் பெரும் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அணித்தலைவர் டிரன் சமி கூறுகையில் நானும் சரி என்னுடன் வந்த வீரர்களும் சரி அந்த விமானத்தில் இருந்தவர்களும் சரி வாழ்க்கையில் இந்த அனுபவத்தை மறக்க முடியாது, அத்தனை பேரும் நடுங்கிப் போய் விட்டோம்.

2வது டெஸ்ட் போட்டிக்கான பேசின் ரிசர்வ் பிட்ச்சை விட பயங்கரமாக இந்த அனுபவம் இருந்தது. ஒரு நிமிடம் நான் விமானத்தின் என்ஜின்களில் ஒன்று உடைந்து விட்டதோ என்று சந்தேகப்பட்டேன். எனது மகள் அழுவது போன்று நானும் அழுதுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

விமானம் தரையிறங்க முயற்சித்தபோது பலத்த காற்று வீசியதால் தரையிறங்க முடியாமல் தடுமாறியதே இதற்கு காரணமாகும்.