கொச்சியில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் திருமணம் இன்று நடைபெறவுள்ளது. கொச்சி கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கைதாகி சிறை சென்று மீண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த அரச குடும்பத்துப் பெண்ணான புவனேஸ்வரி குமாரியை அவர் கரம் பிடிக்கிறார். கடந்த 2006ம் ஆண்டு முதல் காதலித்து வந்த இவர்களது திருமணம் கொச்சியில் இன்று நடைபெறவுள்ளது.
திருமணத்திற்கு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கலந்துகொள்ளவிருக்கிறார். திருமணம் இந்திய பாரம்பரிய முறைப்படி நடக்கும் என்றும் திருமண விருந்தின்போது ராஜஸ்தானி மற்றும் கேரள பாரம்பரிய உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் ஸ்ரீசாந்த்துக்கு நெருங்கிய நண்பரான ஜுனைத் ஆர்பி கூறியுள்ளார்.





