உலகில் சிறந்த மனிதராக பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவு!!

542

Popஇந்த வருடத்தின் சிறந்த மனிதராக பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவாகியுள்ளார். அமெரிக்காவின் டைம் சஞ்சிகையால் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மற்றும் தாக்கம் செலுத்திய ஒருவராக பரிசுத்த பாப்பரசர் திகழ்வதால் அவர் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார்.

வறுமை, உலகமயமாக்கம், உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் பரிசுத்த பாப்பரசர் ஆக்கபூர்வமான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றார்.

அமெரிக்கப் புலனாய்வு இரகசியங்களை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த எட்வர்ட் ஸ்னவ்டனுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.