பாகிஸ்தானில் மீண்டும் வெளிநாட்டு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை!!

329

TVபாகிஸ்தானில் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா தொடர்பான நிகழ்ச்சிகளை சுட்டிக்காட்டிய நீதிபதி காலித் மமூத் கான், இந்திய நிகழச்சியில் அனைத்தும் எதிர்மறை பட்டியலில் உள்ளதால் அப்பட்டியலிலுள்ள தயாரிப்புகளை இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதை பரிசீலித்தே இத்தடை பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்திய எதிர்ப்பு கொள்கையை கடைபிடித்து வரும் முபாஷிர் லக்மன் என்பவர் கடந்த மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரச்சினைக்குரிய பேட்டியை தொடர்ந்து, தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு பிறப்பித்த ஒழுங்குமுறை அரசாணையின்படி இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்கள் இறக்குமதி செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருவதாகவும், ஆனால் இவ்வாறு இறக்குமதி செய்வது பாகிஸ்தானின் இறக்குமதி கொள்கைக்கும், மின்னணு தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் எதிரானதென்றும் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் திரைப்படங்கள் அங்கு நல்ல வரவேற்பு பெறாத நிலையில், இந்திய பாலிவுட் திரைப்படங்கள் அங்கு நல்ல வரவேற்பு பெருவது குறிப்பிடத்தக்கது.