இறந்துபோன பெண்ணின் மானம் காத்த தீயணைப்பு வீரர் : மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்!!

612

மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்

கடந்த 13 ஆம் திகதி பொள்ளாச்சியில் நடைபெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த நிலையில், அதில் இறந்துபோன பெண்ணின் கண்ணியம் காத்த தீயணைப்பு வீரரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகில் உள்ள கெடிமேடு PAP பாசனக் கால்வாயில் ஒரு கார் கவிழ்ந்து அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

அந்தக் கால்வாய் சுமார் பதினொரு அடி ஆழமும், இருபதடிக்கு மேல் அகலமும், வினாடிக்குச் சுமார் 1000 கன அடி நீருக்கு மேல் வேகமாகச் செல்லக்கூடியதும் ஆகும். இதில், தீயணைப்பு வீரர் ஒருவர் தன் இடுப்பில் பலத்த ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு, கிரேன் உதவியுடன் கால்வாயில் இறங்கியுள்ளார்.

கயிரை காரில் கட்டி இவர் இழுக்கையில் அந்த காரில் இறந்துபோன பெண்ணின் சடலம் வெளியே வந்தது. அதுவும் அவரது மேலாடை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதை அறிந்த வீரர், மேலே சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்களிடம் ஒரு துணியைத் தன்னிடம் கொடுக்குமாறு வாங்கி,

அந்த நீரின் வேகத்திலும் அந்தப் பெண்ணின் உடலின் மேற்பகுதியில் இறுகச் சுற்றி, பின்னர் கிரேன் மூலம் அந்த உடலை மேலே அனுப்பி வைத்தார். இறந்துபோன பெண்ணின் சடலம் என கருதாமல் கண்ணியமாக செயல்பட்ட தீயணைப்பு வீரரின் செயல் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.