இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை : அதிகரிக்கும் கடுமையான வெப்ப காலநிலை!!

610

மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் கம்பஹா உட்பட பல மாவட்டங்களிலும் நாளை வெப்பமான காலநிலை நிலவும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அவ்வாறு அதிக வெப்பமான காலநிலை நிலவும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் அதிகளவான நீர் பருகுவதுடன் நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு இடங்களில் 40 பாகை செல்சியஸில் கடுமையான வெப்பநிலை காணப்படுகிறது. அது 54 பாகை செல்சியஸாக அதிகரிக்கும் பட்சத்தில் பாரிய ஆபத்துக்கள் ஏற்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.