வவுனியாவில் நுண்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்!!

397

கையெழுத்துப் போராட்டம்

வடமாகாணத்தில் தனியார் நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் அடிமைப்பட்டு சித்திரைவதைப்படும் பெண்களின் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நேற்று (20.03) கையெழுத்துப் போராட்டம் சிதம்பரபுரம் கற்குளம் படிவம் ஒன்று பழனி முருகன் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் ஒன்றியம், உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் வடபகுதியில் தொடர்ந்து இடம்பெறும் கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

வடபகுதியில் இடம்பெறும் கையெழுத்துப் போராட்டம் தென்பகுதியிலும் அங்குள்ள அமைப்பினருடன் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்திய கையெழுத்துப் போராட்டத்தில் அப்பகுதியிலுள்ள பெருமளவான பெண்கள் கலந்து கொண்டனர்.