தீமிதிப்பு உற்சவம்
வவுனியா இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பங்குனி உத்திர தீமிதிப்பு உற்சவம் இன்று (21.03) வியாழக்கிழமை மாலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
பங்குனி உத்திர தினமான இன்று ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெயந்திநாத குருக்களினால் அம்மனுக்கு குளிர்ச்சி அபிசேகமும் விசேட பூசைகளும் இடம்பெற்றது.
தொடர்ந்து நாகபூசணி அம்மன் சிங்க வாகனம் ஏறி உள்வீதி, வெளிவீதி வலம் வந்து வீதியை சுற்றிவந்ததுடன் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்திருந்தனர்.





































