ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு அரசு கண்டனம்!!

623

EUகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கோரும் ஐரோப்பிய ஒன்றின் தீர்மானத்தை கண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, எந்த பரிந்துரைகளை எப்பொழுது அமுல்படுத்துவது என்பதை அரசாங்கம் முடிவு செய்யும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாருக்காகவும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்தப்படவில்லை. எமது சொந்த பிரச்சினைகளுக்காகவும் சொந்த மக்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது. அதனை நாங்கள் பார்த்து கொள்வோம் என்றார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையான அமுல்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய பாராளுமன்றம் நேற்று நிறைவேற்றியது.