ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார்.
மேல் மாகாண சபை உட்பட எந்த மாகாண சபைத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என பொன்சேகா தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
மேல் மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு தமது கட்சியின் பலத்தை காட்ட வேண்டும் என பொன்சேகா தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மேல் மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சி 15 ஆசனங்களை கைப்பற்றும் என பொன்சேகா மதிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனோமா பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த உள்ளதால், அவரை மேல் மாகாண சபைத் தேர்தலில் நிறுத்துவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.