முன் அனுமதியின்றி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை எவர் வேண்டுமானாலும் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்று முதல் வழங்கப்படும் என சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை பார்வையிட வேண்டுமாயின் முன் அனுமதிப் பெறவேண்டும் என நடைமுறை இருந்து வந்தது.
புதிய தீர்மானத்திற்கு அமைய பாராளுமன்றத்தை பார்க்க விரும்பும் எவரும் அங்கு சென்று அதனை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.