வவுனியா செட்டிக்குளம் , முஸல்குட்டி பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தினரால் தொல்பொருள் பகுதியாக பெயரிடப்பட்ட இடமொன்றிலேயே இவர்கள் புதையல் தோண்ட முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் புதையல் தோண்டத் தேவையான உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கைதான சந்தேகநபர்கள் கோஸ்கம மற்றும் செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் நேற்று (12) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.