அமெரிக்காவின் கொலொரடோ அருகே உள்ள கேனான் நகரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடசாலை உள்ளது. இங்கு 6 வயது சிறுவன் படிக்கிறான்.
இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை முத்தமிட்டதாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி அவனை பாடசாலை முதல்வர் தற்காலிக நீக்கம் செய்தார். இதற்கு சிறுவனின் தாயார் ஜெனிபர் சவுந்தாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எனது மகன் சக மாணவியின் கையில்தான் முத்தமிட்டான். அதில் தவறு எதுவும் இல்லை. தனது அன்பை வெளிப்படுத்த இந்த வழியை கையாண்டு இருக்கிறான். இதை பாலியல் தொந்தரவு என மிக கடுமையான குற்றமாக கருதக் கூடாது என்றார்.