வவுனியாவில் புதையல் தோண்டிய நால்வர் பொலிசாரால் கைது!!

631

நால்வர் பொலிசாரால் கைது

வவுனியா வடக்கு மருதோடை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமத்தில் புதையல் தோண்டிய நால்வரை புளியங்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

புளியங்குளம் பகுதியில் புதையல்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற நால்வரை நேற்று (22.03.2019) இரவு 8 மணியளவில் கைது செய்த புளியங்குளம் பொலிசார் அவர்களிடமிருந்த புதையல் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நான்கு நபர்களும் காஞ்சிரமோட்டை காட்டுப்பகுதியில் பேக்கோ மூலம் புதையல் தோண்டியுள்ளனர். இதன் போது பழைய காலத்து புத்தர் சிலை, கல்வெட்டு, கலசம், விளக்கு மற்றும் மலையாள மாந்திரிக புத்தகங்கள் போன்ற பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றிய பொருட்களை முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் குறித்த நான்கு நபர்களையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த வாகனம் மற்றும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் இன்று (23.03) வன்னி பிரதிபொலிஸ் மாஅதிபர் எஸ்.அனுர அபயவிக்கிரம தலைமையில் அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளருக்கு காண்பிக்கப்பட்டது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய 35,35,40,42 வயதுடைய தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு, நெடுங்கேனி பகுதியினை சேர்ந்த நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன்,

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களிடமிருந்து கைப்பற்ற பொருட்கள் மற்றும் பெக்கோ, முச்சக்கரவண்டி போன்றவற்றை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் புதையல் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை தொல்பொருள் திணைக்களகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.