வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் தமிழ் பண்பாட்டு விழா – 2019!!

548

தமிழ் பண்பாட்டு விழா – 2019

யாழ்.இந்திய தூதரகத்தின் நிதிப்பங்களிப்பில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி வழங்கும் முதுதமிழ்ப்புலவர் ஔவையார் நினைவாக நடாத்தப்படும் தமிழ்ப் பண்பாட்டு விழா – 2019 கல்லூரியின் பீடாதிபதி கதிரேசு சுவர்ணராஜா தலமையில் இன்று (24.03.2019) காலை 9.30 மணியளவில் கல்லூரியின் பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

விருந்தினர்கள் கல்லூரி முன்னறலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் இசை நிகழ்ச்சி , வீணை இசை, கூத்து , இசைச்சங்கமம், நாட்டிய நாடகம், இசை நாடகம், கௌரவிப்பு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள்,

பதிவாளர், கல்விசாரா பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வின் போது ஞாபகார்த்தமாக மூன்று மரங்களும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.