ஜன்னல் ஓரம் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை!!

500

Jannalவிமல், விதார்த், பூர்ணா நடித்த ஜன்னல் ஓரம் படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தை கருபழனியப்பன் இயக்கி இருந்தார். கே.முருகன் தயாரித்து இருந்தார்.

இந்த படத்தை எதிர்த்து தயாரிப்பாளர் டி.டி.ராஜா, என். செந்தில்பிரபு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜன்னல் ஓரம் பட தயாரிப்பாளர் கே.முருகன் பட செலவுக்காக 93 லட்சம் கடன் வாங்கி இருந்தார் என்றும் படம் ரிலீசுக்கு முன் திருப்பி தருவதாக உறுதி அளித்துவிட்டு பணத்தை கொடுக்காமலேயே படத்தை வெளியிட்டு விட்டார் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

ரவிபிரசாத் பிலிம் லேப்பில் உறுதிமொழி பத்திரம் பெற்று இருந்தோம். அதுவும் மீறப்பட்டு உள்ளது என்றும் மனுவில் கூறினர். படத்தை தொலைக்காட்சியில் ஒளி பரப்ப தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வற்புறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜன்னல் ஓரம் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.