விஜய்யின் ஜில்லா படப்பிடிப்பில் வெடி விபத்து!!

303

jillaபுதுமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் ஜில்லா. இப்படத்தை ஆர்.பி.சௌத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ், மஹத் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்திற்காக உடுமலைப்பேட்டையில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய், மோகன்லால் உள்ளிட்ட பல நடிகர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் கோவில் திருவிழா போல் படமாக்கப்படும் இந்த பாடல் காட்சியில் வாண வேடிக்கைகளுக்காக வைக்கப்பட்டிருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறின. இதில் துணை நடிகர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படப்பிடிப்பும் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதில் விஜய், மோகன்லால் ஆகியோர் காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் ஜில்லா படக்குழுவினரிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.