உயிரை பணயம் வைத்து இளமைக்கு திரும்பிய 80 வயது பாட்டி : வினோத காரணம்!!

432

இளமைக்கு திரும்பிய 80 வயது பாட்டி

இறந்துவிடலாம் என மருத்துவர்கள் எச்சரித்தும் 80 வயது பாட்டி ஒருவர் £ 10,000 செலவில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த டோனி கோல்ட்பர்க் என்கிற 80 வயது பாட்டி, முதுமை தனக்கு பிடிக்காததால் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார்.

தன்னுடைய ஓய்வூதிய பணத்தை சிறிது சிறிதாக சேர்த்து £ 10,000 டொலர்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இளமைக்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், முதுமையாக இருப்பது என்பது மிகவும் கொடூரமானது. நான் எப்பொழுது இளமையாக இருக்க விரும்பினேன். இதற்காக கடந்த 40 வருடங்கள் கடினமாக உழைத்தேன்.

ஆனால் என்னுடைய உடலமைப்பு மாறியதே தவிர, முகத்தின் பொலிவு மாறவில்லை. கண்ணாடியில் பார்ப்பத்தையே நான் தவிர்க்க ஆரம்பித்தேன். அது என்னை மோசமாக காட்டியது. அறுவை சிகிச்சைக்காக நான் மருத்துவரிடம் சென்ற போது, அவர் என்னை எச்சரித்தார். வயதான காலத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்தால் உயிர் பிழைப்பது கடினம் என கூறினார்.

இறந்தாலும் பரவாயில்லை. இந்த வயதான தோற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பதில் கூறினேன். இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தான் என்னுடைய எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை 10 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது. ஒவ்வொரு நாளும் என்னுடைய நம்பிக்கை அதிகரிக்கிறது. நான் மிகச்சிறப்பாக இருப்பதை போல உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.