மெக்ஸிக்கோவின் சக்தி வளத்துறையை தனியார் மயப்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ஆடைகளை களைத்து உள்ளாடையுடன் நின்றவாறு உரையாற்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இடதுசாரி ஜனநாயக புரட்சி கட்சியைச் சேர்ந்த அந்தோனியோ கார்வியா கொனெஜோலே இவ்வாறு உரையாற்றியுள்ளார்.
சக்தி வளத்துறையை தனியார் மயப்படுத்துவதன் மூலம் நாட்டை தோலுரிப்பதாக குற்றஞ்சாட்டியே அவர் தனது ஆடையை களைந்தார்.
இது வெட்கக் கேடானது. அதனால் கவலைப் படவில்லை. ஏனெனில் உங்களுக்கு உடல் உள்ளது என்று அவர் கூறினார்.
அதே சமயம் இதன் போது அரசியல் எதிராளிகளான இடதுசாரி கட்சியைச் சேர்ந்த லண்டி கரென் குயிரோகாவும் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த லாண்டா பெர்ஸூன்ஸாவும் மோதல்ல் ஈடுப்பட்டதில் லாண்டா கண் பகுதியில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு மருந்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.