மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட்டையே மிஞ்சி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் ஜேம்ஸ் கலாப்டர்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ஜூனியர் தடகள போட்டியில், 14 வயதான ஜேம்ஸ் கலாப்டர் என்ற மாணவன் 200 மீற்றர் ஓட்டத்தில் 21.73 வினாடிகளில் இலக்கை கடந்து, தனது வயது பிரிவில் சாதனை படைத்துள்ளார்.
இது தற்போதைய உலகின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் ஜமைக்காவின் உசேன் போல்ட் 14 வயதில் வெளிப்படுத்திய வேகத்தை விட 0.08 வினாடி அதிகமாகும்.
இதனால் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஜேம்சுக்கு பிரகாசமாக உள்ளது.





