மொட்டை பாஸ் அவதாரம் எடுத்த அஜித்!!

300

Ajithசால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கலக்கி வந்த அஜித் தற்போது மொட்டை பாஸ் அவதாரம் எடுத்துள்ளார். இமேஜைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் அஜித். சமீப காலமாக நரைத்த தலைமுடி, தாடியுடன் படங்களில் தோன்றி நடித்தவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு சிறிதும் குறையவில்லை.

அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான ரசிகர்கள் தலயின் புதிய கெட்டப்பை வரவேற்று ரசித்தார்கள் என்பதே உண்மை. இந்நிலையில் அஜித் இப்போது ஒரு புதிய கெட்டப்பில் அதாவது மொட்டை தலையுடன் காட்சி தருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வந்த வீரம் படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்ததையொட்டி அஜித்தும், இயக்குனர் சிவாவும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானுக்கு தங்களது முடியை காணிக்கையாக்கி வந்திருக்கிறார்கள்.

ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர் என்றாலும் வெளிப்படையாக இப்படி திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து மொட்டை அடித்து வந்திருப்பது இதுதான் முதல் முறை.