வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் திறமைச்சித்தி!!

1275

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலயம்

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தது. வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் திறமைச்சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதன்படி சித்திகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு : V.E.M.ஜஷீத் 7ஏ2பி , S.M.சும்ரி 7ஏபி சி, த.ஜமீன் 7ஏ2சி, ஜெ.அக்ரீனா 7ஏ, 2சி ஆகிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 51 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.