பல்கலைக்கழக மாணவர்களைப் பட்டினிபோட்ட அரசாங்கம் : இலங்கை ஆசிரியர் சங்கம்!!

603

SL-Uniதலைமைத்துவ பயிற்சிகளுக்கு சென்றுள்ள பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு உரிய முறையில் உணவு வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு முகாமில் இரவு உணவாக பனிஸ் வழங்கப்பட்டுள்ளது. மறுநாள் சோறும் பருப்பு கறியும் வழங்கப்பட்டுள்ளது. பனிஸ் மற்றும் பருப்பு சாப்பிடாத மாணவ மாணவியர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

உணவிற்கு போதியளவு பணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்க முடியாவிட்டால் இந்த தலைமைத்துவ பயிற்சியை வழங்கக் கூடாது என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.