ஹிருணிகா தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்!!

590

hirunika_premachandraபாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமசந்திர தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர் ஹிருணிகாவும் அவரது தாயாரும் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்.

மத்திய மாகாணசபையின் முதலமைச்சர் பேட்பாளராக போட்டியிட ஹிருணிகா திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 6ம் திகதி ஹிருணிகாவின் தந்தையான பாரத லக்ஸமன் பிரேமசந்திர கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.

வழக்கு விசாரணைகளின் பின்னர் ஹிருணிகா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.