இலங்கையில் இன்று ஊடக பயங்கரவாதம் நிலவுகிறது : மங்கள சமரவீர!!

577

mangalaஇலங்கையில் இன்று ஊடகப் பயங்கரவாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதம் ஐக்கிய தேசியக்கட்சியை இலக்கு வைத்து வேலைகளை செய்கிறது. மாறாக அரசாங்கத்துக்கு எதிரான விடயங்களை இந்த பயங்கரவாதம் வெளிப்படுத்துவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஊடக முதலாளிகள் தமது அரசியல் காரணங்களுக்காக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரையான உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.