நிலவில் 37 ஆண்டுகளுக்குப் பின் விண்கலம் தரையிறங்குகிறது!!

484

Venkalamநிலவில் 37 ஆண்டு காலத்தில் பூமியிலிருந்து ஒரு விண்கலனை சீனா முதன் முதலாக தரையிறக்க இருக்கிறது.

சீனாவின் விண்கலன் யுட்டு அல்லது ஜேட் ராபிட் என்ற ஆறு சக்கரங்களைக் கொண்ட உலாவியை நிலவில் வானவில் குடா என்றழைக்கப்படும் எரிமலை கொண்ட தட்டையான சமவெளிப் பரப்பில் இன்று மாலை இறக்கவிருக்கிறது.

இந்த உலாவி ஒரு மணிக்கு 200 மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கவல்லது. 30 டிகிரி கோணமுள்ள மேடுகள் மீதும் இது ஏறும்.

1970களில் சோவியத் ஒன்றியமும் . அமெரிக்காவும் நிலவுக்கு அனுப்பிய விண்கலன்களில் இருந்ததை விட மிகவும் நுட்பமான உபகரணங்களை சீனாவின் இந்த உலாவி எடுத்துச் செல்கிறது. இதில் நிலவின் மண் மற்றும் தரையின் மேற்பரப்பைத் தாண்டி, ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்த ராடார் கருவி இருக்கிறது.

இந்த நிலவுப் பயணம் சீனாவின் பேரார்வமிக்க விண் ஆராய்ச்சித் திட்டத்தில் ஒரு பெரிய படி என்று பிபிசியின் அறிவியல் செய்தியாளர் கூறுகிறார். நிலவுக்கான இந்த விண்கலனை டிசம்பர் முதல் நாள் சீனா தனது சாஞ்ச்-இ ராக்கெட் முலம் விண்ணில் ஏவியது.