தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகளில் பிரிட்டனின் உலகத் தமிழர் பேரவை, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்ய உள்ளது.
மறைந்த தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கு இன்று அவரது சொந்த கிராமமான குணுவில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவைக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்களின் சார்பில் இறுதிக் கிரியைகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் (Obed Bopela) ஒபெட் பொபேலாவுடன் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.





