நாடுகடத்தப்பட்ட பிரபல நடிகர் விசாரணைகளின் பின் கைது!!

681

நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் விசாரணைகளின் பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டுபாயில் வைத்து பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட குறித்த நடிகர் உட்பட நால்வர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதனையடுத்து, நடிகர் ரயன் வேன் ரோயன் உட்பட நால்வர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து நடிகர் ரயன் வேன் ரோயனிடம் 18 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின் பின்னர் நடிகர் ரயன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சா வைத்திருந்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவர் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.