வவுனியாவில் இடம்பெற்ற மண்டேலாவிற்கு அஞ்சலி நிகழ்வு!!(படங்கள்)

516

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று காலை மறைந்த மண்டேலாவிற்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

மண்டேலா நினைவு நிகழ்வு ஏற்பாடுக்குழு ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் மண்டேலாவின் படத்திற்கு மலரஞ்சலி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மண்டேலா தொடர்பான உரைகளும் இடம்பெற்றிருந்தது.

தன்னார்வ செயற்பாட்டாளர் எஸ். நரசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திதியிருந்தனர்.

இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஆர்.இந்திரராஜா உட்பட அரசியில் மற்றும் பொது அமைப்பபுக்களின் பிரதிநிதிகள் மத தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1

2

3

4

5

6

7