முல்லைத்தீவில் மனைவியை வெட்டிக் கொலை செய்துள்ள கணவன்!!

626

கொலை செய்துள்ள கணவன்

முல்லைத்தீவு – உடையார்கட்டு, மூங்கிலாறு வடக்கு பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய காந்தரூபி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

உயிரிழந்த பெண்ணின் கணவரான சந்தேகநபரை பொலிஸார் தேடி வருவதுடன் இது தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.