தமிழில் நல்ல கரக்டர் எனக்கு வரவில்லை : பிரியாமணி வருத்தம்!!

370

Priyamaniபிரியாமணிக்கு மூன்று வருடங்களாக தமிழில் படங்கள் இல்லை. பருத்தி வீரன் மூலம் தேசிய விருது பெற்ற இவர் தமிழ் பட உலகில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மலைக்கோட்டை, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில படங்களில் மட்டுமே நடிக்க முடிந்தது. கடைசியாக 2010ல் ரிலீசான ராவணன் படத்தில் நடித்தார். சமீபத்தில் கன்னடத்தில் அவர் நடித்த சாருலதா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். தமிழ் பட உலகம் முழுமையாக அவரை ஒதுக்கிவிட்டது.

தற்போது கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்று பிரியா மணியிடம் கேட்டபோது தமிழ் படங்களில் நல்ல கரக்டர்கள் வரவில்லை. சாருலதா படத்துக்கு பிறகு என்னை திருப்திபடுத்தும் கரக்டர்கள் எதுவும் அமையவில்லை. இதனால் நடிக்கவில்லை.

மலையாளத்தில் ட்ரூ ஸ்டோரி என்ற படத்தில் நடிக்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர். கன்னடத்தில் அம்பரீஷா என்ற படத்திலும் நடிக்கிறேன் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது..

சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி படத்தில் குத்தாட்டம் ஆடியதை தெடர்ந்து நிறைய இந்திப் படங்களில் அதுபோல் ஆட அழைப்புகள் வருகின்றன. நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் ஆடுவேன். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் படங்களில் ஆட வாய்ப்பு கிட்டினால் ஆடுவேன் என்று அவர் கூறினார்.