சம்பளத்தை 20 லட்சமாக குறைத்த திரிஷா!!

807

Triநடிகை திரிஷா கன்னட படத்தில் நடிக்க 20 லட்சம் சம்பளத்துக்கு சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா, திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் அதிக சம்பளம் பெறும் பட்டியலில் இருந்தனர். சிம்பு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவுக்கு 2 கோடி சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

திரிஷா சம்பளமும் 1 கோடியை தாண்டி இருந்தது. ஆனால் சமீப காலமாக அவருக்கு பெரிதாக படங்கள் இல்லை. அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, டாப்சி, காஜல் அகர்வால், அமலா பால் உள்ளிட்டோர் திரிஷா மார்க்கெட்டை சரித்துவிட்டனர். இதனால் சம்பளத்தை குறைக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க இருபது லட்சம் ரூபாய் சம்பளம் பேசி உள்ளனர். இந்த படம் மூலம் கன்னட மார்க்கெட்டை பிடிக்கலாம், என்ற எதிர்பார்ப்பிலேயே இந்த சம்பளத்துக்கு அவர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

திரிஷா திரையுலகுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை கன்னட படங்களில் நடிக்கவில்லை. முதல் முறையாக கன்னடத்தில் நடிக்கிறார்.